Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானை பார்வையிட வரும் ஐ நா பொதுச்செயலாளர்

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (22:29 IST)
பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், தற்போது சர்பாஸ் சாரிஃப் புதிய பதவியேற்றார்.

இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு, பெட்ரோல் ,டீசல் விலை உயர்ந்த நிலையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் குறைந்ததால் அங்கு பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கியுள்ளது.

இந்த   நிலையில், அங்குள்ள  தொழிற்சாலைகளிலும் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே  நாட்டில் பொருளாதார நிலைமைச் சமாளிக்கும் வகையில் பிரதமர் ஷபாஸ் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

 இந்த  நிலையில், பாகிஸ்தானில் பருவமழை பெய்து வருகிறது. இங்கு கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு சிந்த் மகாணம், கைபர், பக்துங்க்வா,  பலோசிஸ்தான் ஆகிய மாகாணங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.இதனால் அங்கு தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அந்த நாட்டில் மொத்தம் 3 கோடியே 30 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 1200க்கும் மேற்பட்டடோர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில்  நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு எடுத்து வருகிறது. வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்துள்ள பாகிஸ்தான்  ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் அடுத்த வாரம் பார்வையிட உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments