இஸ்ரேல் நாட்டிற்குள் ஐநா பொதுச் செயலாளர் நுழைய தடை என அறிவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவாக தெரிவித்துள்ள நிலையில், ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போரை தவிர்க்க முயற்சி எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் ஆளுமை இல்லாதவர் என்றும், அவர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாகவும், இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்து உள்ள நிலையில், ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் அதனை கண்டிக்கவில்லை என்றும், எனவே இஸ்ரேல் மண்ணில் அவர் காலடி எடுத்து வைக்க உரிமை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் கொலைகாரர்களை இதுவரை பயங்கரவாத அமைப்பாக ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் அறிவிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.