Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோபத்தில் இருக்கும் மக்களிடம் தாக்குதல் கூடாது: இலங்கைக்கு ஐ.நா அட்வைஸ்!

Advertiesment
கோபத்தில் இருக்கும் மக்களிடம் தாக்குதல் கூடாது: இலங்கைக்கு ஐ.நா அட்வைஸ்!
, புதன், 6 ஏப்ரல் 2022 (14:02 IST)
இலங்கை அரசு கோபத்தில் இருக்கும் மக்களிடம் சுமூகமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என ஐ.நா.சபை குறிப்பிட்டுள்ளது. 

 
இலங்கையில் நாளுக்கு நாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தை மக்கள் நடத்தி வரும் நிலையில் அவசர நிலை ஏப்ரல் ஒன்றாம் தேதி பிறப்பிக்கப்பட்டது. பொது மக்களின் கொந்தளிப்பு காரணமாக தற்போது அவசர நிலையை வாபஸ் பெறப் போவதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து ஐ.நா.சபை இது குறித்து தெரிவித்துள்ளதாவது, இலங்கை நிலவரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது சரியான செயல் அல்ல. சிங்கள படைகள் அப்படி அத்துமீறி நடந்துகொள்ளக் கூடாது.
 
கோபத்தில் இருக்கும் மக்களிடம் சுமூகமான முறையில் நடந்துகொள்ள வேண்டும். அதன் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முன் வர வேண்டும். எதிர்க்கட்சிகள் மக்களிடம் போராட்டத்தை தூண்டிவிட செய்யக்கூடாது. அமைதியை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என கோரியுள்ளது. 
 
இந்நிலையில் இலங்கையின் கோத்தபய அரசுக்கு இருந்த பெரும்பான்மை  இழக்கப்பட்டதாக கூறப்படுவதை அடுத்து பரபரப்பான சூழ்நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியுள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தூக்கம் இல்லாமல் தவிக்கும் தென் கொரிய மக்கள் - அதிர்ச்சிகரமான வரலாற்றுப் பின்னணி