Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

Mahendran
வியாழன், 5 ஜூன் 2025 (17:05 IST)
சமீபத்தில், உக்ரைன் நாடு ரஷ்யா மீது அதிரடியான தாக்குதல்  நடத்திய நிலையில், அந்த தாக்குதலுக்கு புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார் என்றும், எனவே போர் நிற்க வாய்ப்பே இல்லை என்றும் டிரம்ப் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கண்டெய்னர் மூலம் ட்ரோன்களை கொண்டு சென்ற உக்ரைன், ரஷ்யாவின் விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ரஷ்யாவின் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், குண்டுமழை பொழிந்த ரஷ்யாவின் விமானங்களும் அழிக்கப்பட்டு விட்டன.
 
இந்த நிலையில், படுமோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் ரஷ்யா பழிக்கு பழி வாங்க உக்ரைன் மீது ஒரு பெரிய தாக்குதல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசி அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘புதினிடம் 75 நிமிடங்கள் பேசினேன்.உக்ரைன்  தாக்குதலுக்கு பதில் தாக்குதல் கொடுக்க அவர் தயாராக இருக்கிறார். எனவே, இப்போதைக்கு இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை" என்று தெரிகிறது என்று கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments