Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வாரங்கள் முடக்கப்படும் பிரிட்டன்: பிரதமர் போரீஸ் ஜான்சன் உத்தரவு

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (08:24 IST)
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள நாடுகளில் ஒன்றான பிரிட்டன் மூன்று வாரங்களுக்கு முடக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து பிரிட்டன் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
பிரிட்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நாளுக்கு நாள் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை கொரோனா வைரசுக்கு பிரிட்டனில் மட்டும் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பதும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் நிலைமை மோசமாவதை அறிந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடனடியாக பிரிட்டனை மூன்று வாரங்களுக்கு முடக்க உத்தரவிட்டுள்ளார். திருமணம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களையும் மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்கும்படி அவர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் உணவு மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் என்றும் அந்த பொருட்களை வாங்க வருபவர்கள் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் இரண்டு பேர்களுக்கு மேல் கூடினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments