வானத்தில் மினுமினுத்த பாம்பு: வேற்றுகிரகவாசியா???

வியாழன், 13 ஜூன் 2019 (10:31 IST)
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், ஒரு இளைஞரின் கேமராவில் பதிவான, வானத்தில் மினுமினுத்தபடியே பாம்பு போல பறந்து சென்ற உருவம், வேற்றுகிரகவாசியா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
நேற்று இரவு இளைஞர் ஒருவர், கலிஃபோர்னியா பாலைவனத்தின் வழியாக காரில் சென்று கொண்டிருந்தபோது, வானத்தில் பாம்பு போன்ற வடிவில் மினுமினுத்தபடியே ஒரு விநோத உருவம் பறந்து செல்வது போல் பார்த்திருக்கிறார்.

பின்பு அந்த இளைஞர், தன்னுடைய மொபைல் கேமராவில் அதை வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் அது வேற்றுகிரகவாசிகளின் விமானமாக இருக்குமோ என்று சந்தேகித்துள்ளனர்.

மேலும் இதற்கு முன் வட அமெரிக்க நாடுகளில், பல முறை இது போன்று வானத்தில் விநோத உருவங்கள் தெரிந்திருக்கின்றன எனவும், அந்த உருவங்கள் எல்லாம் வேற்றுகிரகவாசிகளின் விமானமாக இருக்கலாம் என்றும் பல செய்திகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.           

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் டாப் சீக்ரெட்!! பாஜக தலைவர் யார்? அமித்ஷாவின் வியூகம் கைக்கொடுக்குமா?