Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலும் ஒழித்து கட்டுவோம்: ஒபாமா ஆவேசம்

Advertiesment
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலும் ஒழித்து கட்டுவோம்: ஒபாமா ஆவேசம்
, வியாழன், 4 செப்டம்பர் 2014 (16:33 IST)
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழித்து, இஸ்லாமிய தேசம் என்று அழைத்துக் கொள்ளும் அந்த அமைப்பை நிர்மூலமாக்க அமெரிக்க உறுதி பூண்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
 
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பல இடங்களை பிடித்து வைத்துள்ளனர். அந்த இடங்களை மீட்பதற்காக அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் பிடியிலிருந்த அமெரிக்க செய்தியாளர் ஒருவரை ஏற்கனவே தலையை துண்டித்து கொலை செய்தனர்.
 
தற்போது மேலும் ஒரு அமெரிக்க செய்தியாளரை தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். அதன் வீடியோ காட்சிகளை நேற்று ஒளிபரப்பினார்கள். இது அமெரிக்காவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
 
இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியிருப்பதாவது:–
 
அமெரிக்க செய்தியாளரின் தலையை துண்டிக்கும் வீடியோவை வெளியிட்டதன் மூலம் தீவிரவாதிகளால் அமெரிக்காவை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது. அமெரிக்கர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இந்த மோசமான செயலை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம். இதற்கு நிச்சயமாக உரிய பதிலடி கொடுக்கப்படும்.
 
தீவிரவாதிகளின் செயலை கண்டு அமெரிக்கா அஞ்சப்போவதில்லை. இஸ்லாமிய தேசம் என்று அழைத்துக் கொள்ளும் அந்த அமைப்பை நிர்மூலமாக்க அமெரிக்க உறுதி பூண்டுள்ளது.
 
தீவிரவாதிகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். அவர்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற உறுதி இப்போது மீண்டும் எழுந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இல்லாத நிலையை உருவாக்குவோம். துணிச்சல் மிகுந்த அந்த இரு செய்தியாளர்களின் குடும்பத்துக்காக நாம் இறைவனை பிரார்த்திக்கிறோம்.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil