தன்னுடைய மகளை ஒருவருக்கு கொடுத்து விட்டு, அவரின் தங்கையை 2வது திருமணம் செய்து கொண்ட ஒரு நபரை பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் ஜம்பூர் எனும் ஊரில் வசிப்பவ்வர் வசீர் அஹமது(36). இவர் தன்னுடைய 13 வயது பெண்ணை, தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் முகமது ரம்ஜானுக்கு(36) கொடுத்துவிட்டு, ரம்ஜானின் தங்கையை 2வது திருமணம் செய்து கொண்டார்.
ஏதோ பண்டமாற்றம் போல் அவர்கள் இருவரும், தங்கள் வீட்டு பெண்களை மாற்றிக் கொண்ட விவகாரம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதில் முகமது ரம்ஜானுக்கு காது கேட்காது மற்றும் வாய் பேச முடியாது. ஆனாலும், அவருக்கு தன்னுடைய மகளை கொடுத்துள்ளார் வசீம்.
இந்த விவகாரம் வெளியே கசியவே போலீசார் வசீர் மற்றும் ரம்ஜானை அழைத்து சென்று விசாரணை செய்ததோடு, 16 வயதிற்குட்பட்ட பெண்ணை திருமனம் செய்ததற்காக இருவரையும் சிறையில் அடைத்தனர். ஆனால், அந்த பெண் தனக்கு 16 வயது ஆகிவிட்டது என நீதிமன்றத்தில் நிரூபித்ததையடுத்து அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
வசீர் அகமதிற்கு முதல் மனைவி மூலம் குழந்தை இல்லை. எனவே ரம்ஜானின் தங்கை மூலம் தனக்கு குழந்தைகள் பிறக்கும் என நம்பி, அவரை 2வது மனைவியாக தேர்ந்தெடுத்துள்ளார் எனத் தெரிகிறது.
எங்கள் வீட்டுப் பெண்களை மாற்றிக் கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளது என அவர்கள் கூறியுள்ளனர். அந்த கிராமத்தில் மட்டுமல்ல, பாகிதானில் உள்ள பல கிராமங்களில், படிப்பறிவில்லாத காரணத்தால், இப்படி பெண்களை மாற்றிக் கொள்ளும் வழக்கம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.