Publish Date: Mon, 21 Nov 2022 (17:08 IST)
Updated Date: Mon, 21 Nov 2022 (17:10 IST)
ஹிஜாப் அணியாமல் வீடியோ வெளியிட்ட 2 நடிகைகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஈரான் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் நாட்டில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் அணிய முடியாது என்ற போராட்டம் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போராட்டம் வலுவடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஈரான் நாட்டு நடிகைகள் இரண்டு பேர் ஹிஜாப் அணியாமல் வீடியோவை பதிவு செய்தனர். போராட்டக்காரர்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் இந்த வீடியோ குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது
இதனை அடுத்தே ஹிஜாப் அணியாமல் வீடியோ வெளியிட்ட இரண்டு நடிகைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.