Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவுக்கு அச்சத்தை ஏற்படுத்திய எலான் மஸ்க் - விவேக் ராமசாமி.. இதுதான் காரணம்?

Mahendran
திங்கள், 25 நவம்பர் 2024 (10:10 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், தொழில் அதிபர் எலான் மஸ்க் மற்றும் தமிழர் விவேக் ராமசாமி ஆகிய இருவரை வைத்து புதிய துறையை உருவாக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த துறை, சீனாவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என சீன அரசின் கொள்கை ஆலோசகர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
அமெரிக்கா அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரது ஆட்சி காலத்தில் சீனாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருக்கும் என்றும், பெரும் சவால்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகிய இருவரால் ஆரம்பிக்கப்பட்ட புதிய துறை, சீனாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் சர்வதேச விவகாரங்களுக்கான நிறுவனங்கள் நடத்திய கூட்டத்தில் சீனாவின் கொள்கை ஆலோசகர் தெரிவித்தார்.
 
அமெரிக்காவுக்கான சீனாவின் ஏற்றுமதிகள் மீது விதிக்கப்படும் வரிகள் 60 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் சீனாவுக்கு பெரும் சவால் தயாராகி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். சீனாவுடன் நேரடி போரில் அமெரிக்கா ஈடுபடாது என்றாலும், வர்த்தக போரில் ஈடுபட அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அரசு சீனாவுக்கு சவால் அளிப்பதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இந்நிலையில் எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியஇருவரும் சேர்ந்து புதிய அரசின் செயல் திறன் மேம்பாட்டு துறை தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் ஆயிரக்கணக்கான விதிமுறைகளை மாற்றவும் அகற்றவும் வாய்ப்பு இருப்பதாகவும், அரசு பணியாளர்கள் குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் அன்பு தம்பி எடப்பாடி பழனிசாமி..! எம்ஜிஆர் பேசிய வீடியோவை வெளியிட்ட அதிமுக!

கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் முடிவது எப்போது? ரயில்வே நிர்வாகம் தகவல்..!

தமிழ்நாட்டுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! இந்திய வானிலை ஆய்வு மையம்..!

அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல்..!

நாளை தான் கடைசி தினம்.. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments