அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நீண்டகால ஆலோசகருக்கு ரஷ்யா குறித்த பொய்யான தகவல்களை அளித்த விவகாரத்தில் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் நீண்ட காலமாக ஆலோசகராக பணியாற்றி வருபவர் ரோஜர் ஸ்டோன். கடந்த 2016ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக தொடுக்கப்பட்ட விசாரணையில் பொய்யான தகவல்களை கூறியதாக ஆலோசகர் ரோஜட் ஸ்டோன் கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 3 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.