Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

11 ஆபத்தான நாடுகளின் தடையை நீக்கிய டிரம்ப்...

11 ஆபத்தான நாடுகளின் தடையை நீக்கிய டிரம்ப்...
, செவ்வாய், 30 ஜனவரி 2018 (21:36 IST)
11 நாடுகளை ஆபத்தான நாடுகள் என வரையறுத்து அந்நாடுகளிலிருந்து அகதிகள் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்து இருந்தது. இந்த தடையை இப்போது நீங்கி உள்ளது.
 
வட கொரியா மற்றும் 10 இஸ்லாமிய தேசங்களிலிருந்து அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் தடை விதித்க்கப்பட்டது. தற்போது இந்த தடையில் கரிசனம் காட்டப்பட்டுள்ளது. 
 
இது குறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் பின்வருமாறு பேசினார், எங்களுக்கு எங்கள் நாட்டிற்குள் யார் நுழைகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்று.
 
தடை விதிக்கப்பட்ட நாடுகளான எகிப்து, இரான், இராக், லிப்யா, மாலி வடகொரியா, சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா மற்றும் ஏமனை சேர்ந்த அகதிகள் இத்தனை நாட்களாக அமெரிக்காவிற்குள் நுழைய த்டை செய்யப்பட்டிருந்தது. 
 
கடந்த மூன்று ஆண்டுகளாக, அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளில் 40 சதவிகிதத்தினர் இந்த 11 நாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிரம்ப் அரசாங்கம், தடை விதித்த பிறகு, இந்த 11 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள் வெறும் 23 பேர் தான். இந்த 23 நபர்களும் சட்ட அனுமதிக்கு பின்தான் அனுமதிக்கப்பட்டனர் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.70,000 கோடியை கிடப்பில் போட்ட மத்திய அரசு...