கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம் - சீனாவை சந்தேகிக்கும் டிரம்ப்!

வெள்ளி, 27 மார்ச் 2020 (17:02 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் நாடுகளில் முதல் இடத்தில் அமெரிக்கா உருவெடுத்திருப்பதாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை கூறும் சீனா மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுவரை அந்நாட்டில் உண்மையாகவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்னவென்று உங்களுக்கு தெரியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இத்தொற்றை முதன் முதலில் கண்டறிந்த சீனாவில் இதுவரை 81,828 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 80,589 பேருக்கும் , அமெரிக்காவில்  85,991 கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும் அமெரிக்காவைவிட இத்தாலி , ஸ்பெயின் , சீனா ஆகிய நாடுகளில் அதிக உயிரிழப்பு நேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கொரோனா தாக்கிய மனிதரின் நுரையீரல் பார்க்க எப்படி இருக்கும்? வீடியோ உள்ளே!!