Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா வைரஸை சீனாதான் உருவாக்கியது என்ற ஆதாரம் உள்ளது! ட்ரம்ப் தடாலடி!

Advertiesment
கொரோனா வைரஸை சீனாதான் உருவாக்கியது என்ற ஆதாரம் உள்ளது! ட்ரம்ப் தடாலடி!
, வெள்ளி, 1 மே 2020 (08:21 IST)
கொரோனா வைரஸை அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள அமெரிக்கா தனது வர்த்தகப் பகையாளி ஆன சீனாதான் இந்த வைரஸை உருவாக்கியது என்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியான நடவடிக்கைகளில் சீனாவுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நீண்ட காலமாக வாக்குவாதம் இருந்தது. மூன்றாம் உலக நாடு என்ற பெயரில் பொருளாதார சலுகைகளை அபிரிமிதமாக சீனா அனுபவித்து வருவதாக ட்ரம்ப் சில இடங்களில் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதற்கு சீனா முன்கூட்டியே எச்சரிக்காததே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

ஆரம்பம் முதலே சீனாதான் இந்த வைரஸை கண்டுபிடித்து உலகிற்குப் பரப்பியது என்கிற ரீதியிலேயே ட்ரம்ப் பேசி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ட்ரம்ப், ‘வுஹான் மாகாணாத்தில் உள்ள வூஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜியிலிருந்து இந்த வைரஸ் உருவானது என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. ஆனால், அதை இப்போது வெளியிட முடியாது. இது ஒரு இயற்கையான வைரஸ் இல்லை. விஞ்ஞானிகள், உளவுத் துறை அனைவரையும் ஒன்றாக இணைக்கப் போகிறோம். இறுதியில் ஒரு நல்ல பதில் கிடைக்கும்’ எனக் கூறினார்.

ஆனால் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆதாரத்தைப் பற்றி திரும்ப திரும்ப கேள்வி எழுப்பியபோதும், அதைக் குறித்து பேச தனக்கு அனுமதி இல்லை என சொல்லிவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மது குடித்தால் தொண்டையில் உள்ள வைரஸ் செத்துவிடும்: முதல்வருக்கு எம்.எல்.ஏ கடிதம்