அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் மற்றும் காசா போரை நிறுத்த பல்வேறு திட்டங்களை வகுத்த நிலையில், இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு போரை நிறுத்த ஒப்புக்கொண்டார். ஆனால், ஹமாஸ் அமைப்பு போரை நிறுத்த ஒப்புக்கொள்ளாமல் இருப்பதாக தகவல் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், ஹமாஸுக்கு அதிபர் டிரம்ப் 4 நாட்கள் கெடு விதித்துள்ளார்.
காசா போரை முடிவுக்கு கொண்டுவரும் 20 அம்சத் திட்டங்கள் மீது உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்புக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டால், அது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்றும், ஒருவேளை நிராகரித்தால் மோசமான முடிவாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கைக்குப் பின் ஹமாஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன, 3 ஆண்டு போர் முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை ஹமாஸ் அமெரிக்காவின் 20 அம்ச திட்டத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால், ட்ரம்பின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.