Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2000 நாசா ஊழியர்கள் டிஸ்மிஸ்.. டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு..!

Mahendran
வெள்ளி, 11 ஜூலை 2025 (10:19 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நாசாவில் பணிபுரியும் சுமார் 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செலவுகளை குறைக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது அடுத்த கட்டமாக, நாசாவில் உயர் பொறுப்பில் இருக்கும் 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க அரசாங்க வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின்படி, 2,145 பேரை பணிநீக்கம் செய்யப் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த அதிரடி முடிவு ஊழியர்கள் மத்தியில் ஒரு பக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்னொரு பக்கம் அமெரிக்காவின் எதிர்கால ஆராய்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
குறிப்பாக, நிலாவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா 2026 ஆம் ஆண்டு திட்டமிட்டுள்ள நிலையில், இந்த பணிநீக்கத்தால் அந்த பணிகள் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக இந்திய மதிப்பில் ₹5 லட்சம் கோடி செலவு குறையும் என்று கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments