Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜினாமா பண்றதுக்குள்ள சொந்த பந்தங்கள் விடுதலை! – ட்ரம்ப்பின் ப்ளான்!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (11:42 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த அதிபர் ட்ரம்ப் பதவி விலகும் முன்பாக தனக்கு வேண்டப்பட்டவர்களை விடுதலை செய்ய முயல்வதாக புகார் எழுந்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனிடம் தோல்வி அடைந்தார். இந்நிலையில் எதிர்வரும் ஜனவரியில் ஜோ பிடன் பதவியேற்க உள்ள நிலையில் தோல்வியை ஒப்புக்கொள்ளாத அதிபர் ட்ரம்ப் தேர்தல் குறித்து பல வழக்குகளை தொடுத்து வருகிறார்.

இந்நிலையில் முந்தைய தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கைது செய்யப்பட்ட ட்ரம்ப்பின் ஆலோசகர்களில் ஒருவரான பால் மனஃபோர்ட், தனது மற்றொரு ஆலோசகரும், சம்பந்தியுமான ரோஜர் ஸ்டோன் மற்றும் ஈராக் படுகொலையில் தண்டனை பெற்றோர் ஆகியோரை விடுதலை செய்ய ட்ரம்ப் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ட்ரம்ப்பின் இந்த செயல்பாடுகளுக்கு எதிர்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பகல் 1 மணி வரை 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து.. என்ன காரணம்?

முதலாளிகள் மீது வன்மமா? திட்டுவதற்காக புதிய சேவை அறிமுகம்! - எப்படியெல்லாம் பண்றாங்க!?

3 நாட்களில் 1500 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்னும் உச்சத்திற்கு செல்லும் என தகவல்..!

டிபன் பாக்ஸை கொடுத்து 10 வயது மாணவியை வன்கொடுமை செய்த ஆசிரியர்! - அரியலூரில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments