ஜான் எப் கென்னடி படுகொலை வழக்கை தோண்டும் டிரம்ப்: 3000 ரகசிய ஆவணங்களை வெளியிட ஒப்புதல்!!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (15:39 IST)
அமெரிக்க மக்களை மட்டுல்லாமல் உலக மக்கள் அனைவரையும் கவர்ந்தவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் எப் கென்னடி. 


 
 
கடந்த 1963 நவம்பர் 22 ஆம் தேதி, டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகருக்கு தனது மனைவியுடன் காரில் ஊர்வலமாக சென்றபோது ஜான் எப் கென்னடி சுட்டுக்கொள்ளப்பட்டார்.  
 
மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து செல்லப்பட்ட போதிலும் அரை மணி நேரத்தில் உயிரிழந்தார். கென்னடி கொல்லப்பட்ட சில மணி நேரத்திற்குள் ஆஸ்வால்டு என்ற இளைஞன் இந்த கொலை சம்பவமாக கைது செய்யப்பட்டான். 
 
ஆனால், அவனையும் ஜாக் ரூபி என்பவன் சுட்டதால், ஆஸ்வால்டும் உயிரிழந்தான். இதனால், கென்னடியை அவன் எதற்காக அவன் சுட்டு கொன்றான், அதன் பின்னணி என்ன என்பது தெரியாமல் போய்விட்டது. 
 
இந்நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடி படுகொலை தொடர்பாக உள்ள 3,000 ரகசிய ஆவணங்களை வெளியிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனுமதி அளித்து உள்ளார்.  
 
ஆனால் அந்த ரகசிய ஆவணங்களில் இராணுவ மற்றும் உளவுத்துறை சம்பந்தமான முக்கிய நடவடிக்கைகளுக்கு உரிய சில ஆவணங்கள் பாதுகாக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments