Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்க நிறத்தில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் டிரம்ப் குடும்ப நிறுவனம்.. கடும் விமர்சனங்களால் பரபரப்பு..!

Mahendran
புதன், 18 ஜூன் 2025 (10:22 IST)
டொனால்ட் டிரம்ப்பின் குடும்ப நிறுவனம் 'டிரம்ப் மொபைல்' என்ற புதிய வயர்லெஸ் சேவையையும், ஸ்மார்ட்ஃபோன் பிராண்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
ட்ரம்ப்பின் மகன்களால் நடத்தப்படும்  நிறுவனம், தங்க நிறத்திலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. இதன் விலை $499 (சுமார் ரூ. 43,050) என்றும், இண்டர்நெட் மாத கட்டணம் $47.45  என்றும் அறிவித்துள்ளது.  
 
இதுகுறித்து அமெரிக்க அரசியல் விமர்சகர்கள், ‘அதிபர் டிரம்ப் தனது பதவியை பயன்படுத்தி வணிகத்தை பிரபலப்படுத்துவது ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கின்றனர். முழுக்க முழுக்க அமெரிக்க உதிரிபாகங்களை கொண்டு ஒரு ஸ்மார்ட்ஃபோனை உருவாக்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளதால், "மேட் இன் அமெரிக்கா" என்ற கூற்று சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
 
'டிரம்ப் மொபைல் போனில் 6.78 இன்ச் AMOLED திரை (120 Hz), 50 MP முதன்மை கேமரா, 16 MP செல்ஃபி கேமரா, 5,000 mAh பேட்டரி, 12GB RAM, 256GB விரிவாக்கக்கூடிய சேமிப்பகம் மற்றும் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் ஆகியவை உள்ளன.  
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments