உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் 45வது அதிபரை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் ஜனநாயகக்கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக்கட்சி சார்பில் டெனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. சில மாகாணங்களில் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் மற்ற மாகாணங்களில் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் மக்கள் நேரடியாக வாக்களித்தாலும் அதிபர் யார் என்பதை எலக்டோரல் உறுப்பினர்களின் வாக்குகளை வைத்து முடிவு செய்யப்படுகிறது.
எலக்டோரல் உறுப்பினர்களின் மொத்த வாக்குகள் 538 ஆகும். இதில் 270 வாக்குகள் பெற்றால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். ஏனென்றால் அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு பொதுமக்கள் நேரடியாக வாக்களிப்பதில்லை.
தற்போது வரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் டிரம்பு 244 வாக்குகள் பெற்றும, ஹிலாரி 209 வாக்குகள் பெற்றுள்ளனர். வெற்றி வாய்ப்பு, டிரம்புக்கு அதிகமாக உள்ளது.