Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதை நான் சும்மா விடுறதா இல்ல! – ஹூவோடு மல்லுக்கட்டும் ட்ரம்ப்!

Advertiesment
இதை நான் சும்மா விடுறதா இல்ல! – ஹூவோடு மல்லுக்கட்டும் ட்ரம்ப்!
, வியாழன், 9 ஏப்ரல் 2020 (12:40 IST)
ட்ரம்ப் அரசியல் செய்யாமல் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்ததற்கு பதிலடியாக பேசியிருக்கிறார் அதிபர் ட்ரம்ப்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு தகவல்களை திரட்டி அதிலிருந்து மக்களை காக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது உலக சுகாதார அமைப்பு. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு மீது குற்றம் சாட்டிய ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அதனால் அந்த அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்தபோவதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

ட்ரம்ப்பின் இந்த குற்றசாட்டிற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் நேரடியாகவே பதில் அளித்துள்ளார். அதில் “உலகம் சந்தித்துள்ள இந்த இக்கட்டான சூழலில் இருந்து மக்களை காப்பாற்ற நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். தயவு செய்து கொரோனா வைரஸை வைத்து அரசியல் செய்யாதீர்கள்“ என கூறியுள்ளார்.

இதற்கு பதிலடியாக பேசிய ட்ரம்ப் ”உலக சுகாதார அமைப்புதான் அரசியல் செய்கிறது. மற்ற நாடுகளை விட அமெரிக்கா அதிகளவிலான நிதியை உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கியுள்ளது. ஆனால் அவற்றை பெற்றுக்கொண்டு சீனாவுடன் சேர்ந்து கொண்டு செயல்படுகிறார்கள். இனிமேல் மற்ற நாடுகள் குறைத்து கொடுப்பதையும், அமெரிக்கா அதிகம் கொடுப்பதையும் தொடர முடியாது” என பேசியுள்ளார்.

அமெரிக்கா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் அதிபர் ட்ரம்ப் உலக சுகாதார அமைப்புடன் சண்டைக்கு நிற்பது உலகளாவிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா அபாயம்: ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு!