தேவையான பொருட்கள்:
காராமணி - 1 கப்
மஞ்சள் பொடி - 1/4 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1/4 கப்
உப்பு - தே. அளவு
அரைக்க தேவையான பொருட்கள்:
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
வெந்தையம் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 1/2 கப்
தாளிக்க தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிதளவு
பூண்டு - 2 பற்கள்
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
காராமணி 4 மணி நேரம் ஊறவேண்டும். இரவு தூங்கும் முன் கழுவி ஊற வைத்துவிடுங்கள். அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து ஆறியதும் மிக்ஸியில் மைய அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஊறவைத்த காராமணியை குக்கரில் போட்டு மஞ்சள் பொடி மற்றும் கொஞ்சம் உப்பு சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவைக்கவும். தானாக காற்று வெளியேறும் வரை திறக்க வேண்டாம்.
கடாயில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, பின் கருவேப்பிலை சேர்த்து, பின்னர் வேகவைத்துள்ள காராமணியை சேர்க்கவும். அதோடு அரைத்த தேங்காய் மசாலாவை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீரும் சேர்த்துக்கொள்ளுங்கல். 5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். தண்ணீர் வற்றி தேவையான பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
தாளிக்க கடாயில் எண்னெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதை குழம்பில் ஊற்றி இறுதியாக கொத்தமல்லி தழை தூவி பறிமாறவும். சுவையான காராமணி குழம்பு தயார்.