ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என மூன்று பாலினங்கள் இருக்கும் நிலையில் அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளிலும் ஆண்கள், பெண்கள் என இரண்டுவித கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் விருப்பம் போல் ஆண்கள் அல்லது பெண்கள் கழிவறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஆண்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்
ஆனால் கடந்த மாதம் புதிய அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், மூன்றாம் பாலின மாணவர்களுக்காக ஒபாமா அரசு கொண்டு வந்த இந்த கழிவறை திட்டத்தை இன்று முதல் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். டிரம்ப்பின் இந்த புதிய உத்தரவு அமெரிக்க திருநங்கைகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பள்ளிகளுக்கு உத்தரவு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்த உத்தரவில், "ஒபாமாவின் உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், தேவையற்ற ஒன்றாகவும் உள்ளதால் ரத்து செய்யப்படுவதாக நீதித்துறை, பள்ளித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து வெள்ளை மாளிகை முன்னர் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளதாக திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.