அமெரிக்க அதிபர் தேர்தல் அமெரிக்காவில் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் கொரோனாவை தடுக்க போவதில்லை என ட்ரம்ப் உதவியாளர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் சூடிபிடித்து வருகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும், குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்பும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருவது வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ட்ரம்ப் அரசு அலட்சியம் செய்ததாக ஜோ பிடன் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் ட்ரம்பின் உதவியாளர்கள் குழுவின் தலைவர் பேசிய போது “அமெரிக்காவில் கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்த போவதில்லை. அது ஒரு சாதாரண காய்ச்சல் போன்றதுதான்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ட்ரம்ப்பும் மாஸ்க் அணிவதை தவிர்ப்பது, கொரோனா குறித்த சர்ச்சைக்குரிய செய்திகளை பகிர்வது என செயல்பட்டு வந்த நிலையில் அவரது உதவியாளரும் இவ்வாறு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள்ளது.