Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நம்ம ஊரு அரசியல்வாதிகள் மாறி ஆயிட்டாரே! McDonald’sல் ப்ரெஞ்ச் ப்ரைஸ் போட்டு ஓட்டு கேட்ட ட்ரம்ப்!

Advertiesment
Donald Trump

Prasanth Karthick

, திங்கள், 21 அக்டோபர் 2024 (09:46 IST)

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் பிரபல உணவகத்தில் ப்ரெஞ்ச் ப்ரைஸ் போட்டு கொடுத்து வாக்குகள் சேகரித்த வீடியோ வைரலாகியுள்ளது.

 

 

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். இதற்காக கடந்த சில மாதங்களாகவே டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க மாகாணங்கள் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

 

தற்போது தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டொனால்டு ட்ரம்ப்பின் பிரச்சாரம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் தேர்தல் சமயங்களில் வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்கள், மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக டீக்கடையில் டீ போடுவது, ஹோட்டலில் பரோட்டா போடுவது என செய்து மக்களிடம் வாக்கு சேகரிப்பார்கள்.
 

 

அதுபோல டொனால்டு ட்ரம்ப்பும் சமீபத்தில் கலிபொர்னியாவில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அமெரிக்காவில் பிரபலமாக உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு சென்று அங்கு ப்ரெஞ்ச் ப்ரைஸ் சமைத்து கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிக்குண்டு மிரட்டல்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் போலி மிரட்டல்கள்!