Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியாவில் தொடர்மழை 11 பேர் பலி...50 பேரைக் காணவில்லை

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (23:56 IST)
துருக்கி, சிரியாவை அடுத்து, இந்தோனேஷியாவில் சமீபத்தில் நிலநடுக்கம் வந்து மக்களை அச்சுறுத்திய  நிலையில், சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால், வெளிப்புறத் தீவுகளிலும் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டு, அங்குள்ள மக்கள் வசிக்கும் வீடுகளும் தரைமட்டமாகியுள்ளன.

நிலச்சரிவில், அடித்துச் செல்லப்பட சேறுகளினால் பல வீடுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ரியாவு தீவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி சுமார் 11 பேர் பலியானதாகவும், இதுவரை 50 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணிகள் நடந்து வந்தாலும், அங்கு வானிலை சீராக இல்லாததாலும் இதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பணியை விரைவுபடுத்தி, மக்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் பாதுகாப்பு அமைப்பு நாளை ஹெலிகாப்டரை அனுப்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ: இந்தோனேஷியாவில் சேமிப்புக்கிடங்கில் தீவிபத்து..16 பேர் பலி
 
இதேபோல், மலேசியாவிலும் தொடர் மழையால், சுமார் 41 ஆயிரம் பேர் ஆபத்தான இடங்களைவிட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் 4 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்தியது இந்தியாதான்! அமெரிக்காவுக்கு வேற வேலையில்ல!?! - ட்ரம்ப்க்கு ஜெய்சங்கர் குட்டு!

பிரபல நடிகையின் செல்போன் ஹேக்.. டெலிகிராமில் ஆபாச புகைப்படங்கள்.. அதிர்ச்சி தகவல்..!

100 ஆடம்பர அறைகள்: அரண்மனையை 5 நட்சத்திர ஓட்டலாக மாற்றும் டாடா நிறுவனம்..

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை! - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சீனா - மலேசியா கண்டுபிடிக்கும் மாற்று எரிபொருள்.. EV வாகனங்களுக்கு மூடுவிழாவா?

அடுத்த கட்டுரையில்
Show comments