Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நோயாளியோடு தகாத உறவு: உரிமம் பறிக்கப்பட்ட பெண் மருத்துவர்

நோயாளியோடு தகாத உறவு: உரிமம் பறிக்கப்பட்ட பெண் மருத்துவர்
, சனி, 27 ஜூலை 2019 (13:38 IST)
கனடாவில் புற்றுநோய் நோயாளி ஒருவருடன் பெண் மருத்துவர் உறவு வைத்துக் கொண்டதாக அவரது உரிமத்தை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கனடாவில் உள்ள டோரோண்டோ பகுதியில் புற்றுநோய் மருத்துவராக பணியாற்றுபவர் தீபா சுந்தரலிங்கம். நோயாளி ஒருவர் தீபா தன்னிடம் தகாத உறவு வைத்து கொண்டதாக மருத்துவ கவுன்சிலில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் எனக்கு சிக்கிச்சையளிக்கும் சமயங்களில் பலமுறை இவ்வாறு அவர் செய்துள்ளார். மருத்துவமனையில், நோயாளி படுக்கையில் மற்றும் எனது வீட்டிலும் கூட இது நடந்திருக்கிறது.

அவர் எனக்கு மிக சிறந்த வகையில் மருத்துவம் பார்த்தார். என்னை மிகவும் கனிவாக கவனித்து கொண்டார். அதனால் அவர் என்மீது அத்துமீறுவதை என்னால் தடுக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

இதை மறுத்த தீபா நோயாளிதான் தன்னை தவறான உறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். சிகிச்சைகளின் போது தன்னிடம் அவர் தவறாக நடந்து கொண்டாலும் அவரின் உடல் குணமாக வேண்டும் என்பதிலேயே தான் கவனம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் டோரண்டோ பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழை விடப் பழமையானதா சமஸ்கிருதம் ? – பாடப்புத்தகத்தால் மீண்டும் சர்ச்சை !