ஆலப்புழாவைச் சேர்ந்த இளைஞர் ஒரு இளைஞர் சவூதியில் உள்ள ஹோட்டலில் வேலைசெய்து வந்தார். சுமார் 6 ஆண்டுகாலமாக அவர் அங்கு வேலை செய்துவந்த நிலையில் சமீபத்தில் 1.1 லட்சம் ரியால் கடையில் திருட்டு போனது,இவர் தான் திருடியதாக உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த இளைஞரை சவூதிக்கு அழைத்துச் சென்ற நண்பர், திருடப்பட்ட பணத்தைக் கொடுப்பதாக உறுதி அளித்திருந்த நிலையில் அதை கட்டாமல் காலம் தாழ்த்தினார். பின்னர் போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து திருடிய இளைஞரின் அறையில் தீடீர் சோதனை நடத்தினர். அப்போது திருடுபோன அத்துணை பணமும் கிடைத்தது.
மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வந்தது. அதில் இளைஞர் மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து சவூதி குற்றவியல் நீதிமன்றமானது திருடிய இளைஞரின் கையை வெட்ட உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.