Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவிடம் ஜகா வாங்கி, அமெரிக்காவிடம் சரணடையும் Tik Tok?

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (12:08 IST)
Tik Tok இனி அமெரிக்க நிறுவனமாக செயல்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய அரசு அதிரடியாக 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்தியாவில் மிக அதிகமானோர் உபயோகப்படுத்தி வந்த டிக்டாக், ஹலோ ஆகிய செயலிகளும் இதில் அடங்கும்.  
 
ஏற்கெனவே கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 59 செயலிகளும் நீக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே உபயோகத்தில் இருந்த செயலிகளையும் நெட்வொர்க் நிறுவனக்கள் மூலமாக மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் டிக்டாக் செயலியை அமெரிக்காவும் தடை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகின. 
 
இதனைத்தொடர்ந்து சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டிக்டாக் நிறுவனம் தனது தலைமையகத்தை சீனாவில் இருந்து வேறு நாட்டுக்கு இடம் மாற்றி விடலாம் என ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியானது.
 
தற்போதைய தகவலின் படி சீனாவின் பைட் டான்ஸ் டெக்னலஜி நிறுவனத்தில் இருந்து டிக்டாக் வெளியேறி அமெரிக்க நிறுவனமாக செயல்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என வெள்ளை மாளிகை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் அலுவலகம் முன் குவிந்த ராணுவம்.. டெல்லியில் பரபரப்பு..!

செந்தில் பாலாஜி உள்பட 3 அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: சட்டசபையில் அமளி..!

அமெரிக்காவின் Boeing விமானங்களுக்கு தடை! சீண்டி பார்க்கும் சீனா! அமெரிக்கா ரியாக்‌ஷன் என்ன?

மாநில சுயாட்சி உயர்நிலைக் குழு; அரசிடம் இதற்காக சம்பளம் வாங்க மாட்டேன்! - முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்!

போதைப்பொருள் கேப்சூலை விழுங்கி கடத்திய நபர்.. ‘அயன்’ பாணியில் ஒரு கடத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments