Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’டிரம்ப் மோசடி செய்து படித்தவர்’ - மேரி டிரம்ப் குற்றச்சாட்டு

’டிரம்ப் மோசடி செய்து படித்தவர்’ - மேரி டிரம்ப் குற்றச்சாட்டு
, வியாழன், 16 ஜூலை 2020 (23:23 IST)
டிரம்ப் குறித்து அவரின் உறவினர் எழுதிய புத்தகத்தில் டிரம்ப் ஒரு 'சுயமோகி (narcissist)' எனவும், அவரால் ஒவ்வொரு அமெரிக்கரின் வாழ்வும் அச்சுறுத்தலில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
டிரம்பின் அண்ணன் மகளான மேரி டிரம்பின், `டூ மச் அண்ட் நெவர் எனஃப்: ஹவ் மை ஃபேமிலி க்ரியேடட் தி வேல்ட்ஸ் மோஸ்ட் டேஞ்சரஸ் மேன்` (Too Much and Never Enough: How My Family Created the World's Most Dangerous Man) புத்தகத்தில் டிரம்ப் ஒரு 'மோசக்காரர்' என்றும், 'அனைவரையும் அச்சுறுத்தும் ஒரு நபர்' என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த புத்தகத்தில் வரும் கூற்றுகளை வெள்ளை மாளிகை மறுக்கிறது. மேலும் இந்த புத்தகத்திற்கு தடை செய்ய வெள்ளை மாளிகையால் தொடுக்கப்பட்ட வழக்கும் தோல்வியில் முடிந்தது.
 
 
டிரம்பிற்கு எதுவும் போதாது
 
மேரி டிரம்பிற்கு 55 வயதாகிறது. அவர் தனது புத்தகத்தில் டிரம்பிற்கு "எதுவும் போதாது" என்றும், அவர் "சுயமோகியின் அத்தனை அம்சங்களையும் கொண்டவர்" என்றும் தெரிவித்துள்ளார்.
 
கிளினிக்கல் சைகாலஜி படித்துள்ள மேரி, "டிரம்ப் பலவீனமானவர், ஒவ்வொரு தருணத்திலும் அவரின் ஈகோ அவரை உயர்த்திப் பிடிக்கிறது ஏனென்றால் தான் எதுவென அவர் கூறுகிறாரோ அது அவரில்லை," என தெரிவித்துள்ளார்.
 
டிரம்பிற்கு இந்த குணம், அவரின் தந்தை ஃப்ரேட் டிரம்ப் சீனியரிடம் வந்தது என்றும் அவர் கூறுகிறார்.
 
டிரம்பின் தந்தை தனது மூத்த மகனிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார் என்றும், அவர் குடும்பத்தில் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை எடுத்து நடத்த வேண்டும் என அவரின் தந்தை விரும்பியதாகவும், ஆனால் சூழ்நிலை காரணமாக தனது இரண்டாம் மகனான டொனால்ட் டிரம்பிடம் வர்த்தகத்தை ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் மேரி தெரிவித்துள்ளார்.
 
"ஆனால் அது ஒரு மகிழ்ச்சியான முடிவல்ல. ஃப்ரட் வேறு வழியில்லாமல் தனது மகனின் வர்த்தகத்தில் முதலீடு செய்தார்." என்கிறார் மேரி. இதை வெள்ளை மாளிகை மறுக்கிறது மேலும் தனக்கும் தனது தந்தைக்கும் இணக்கமான ஒரு உறவே இருந்தது என டிரம்ப் கூறுகிறார்.
 
டொனால்ட் டிரம்ப் குறித்த ஆவணம்
 
நியூயார்க் டைம்ஸ், டிரம்ப் குறித்த விசாரணை கட்டுரை ஒன்றை எழுத தான் எவ்வாறு வரி ஆவணங்களை கொடுத்தேன் என விவரிக்கும் மேரி, 1990ஆம் ஆண்டு டிரம்பின் போலியான வரி திட்டத்தையும், வெளிப்படையான சில மோசடிகளையும் அந்த கட்டுரை வெளிக்காட்டியதாகவும் மேரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த மோசடிகளால் டிரம்பிற்கு அவரின் பெற்றோர் கொடுத்த சொத்து மேலும் அதிகரித்தது என்றும் அவர் கூறுகிறார்.
 
2017ஆம் ஆண்டு செய்தியாளர்கள் தன்னை தொடர்புகொண்டபோது முதலில் தான் தயங்கியதாக கூறும் மேரி, சட்ட அலுவலகம் ஒன்றிலிருந்து 19 பெட்டிகள் நிறைய ஆவணங்களை தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து செய்தியாளர்களிடம் கொடுத்தாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பல மாதங்களில் தான் மகிச்சியாக இருக்கும் தருணம் அது என பத்திரிகையாளர்களிடம் கூறியதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
 
'பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மோசடி'
 
டிரம்ப் தனக்கு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்க தனது நண்பரை தேர்வு எழுத வைத்தாகவும் மேரி கூறுகிறார்.
 
ஒரு புத்திசாலியான மாணவனை இதற்காக தேர்ந்தெடுத்த டிரம்ப், அவருக்கு நிறைய பணத்தையும் வழங்கினார் என மேரி கூறுகிறார்.
 
டிரம்ப், நியூயார்க் நகரில் உள்ள ஃபோடாம் பல்கலைக்கழகத்தில் பயின்றார் பின் அங்கிருந்து பென்னிசில்வேனியா பல்கலைக்கழத்தில் உள்ள ஸ்கூல் ஆஃப் பிசினஸிற்கு மாற்றப்பட்டார்.
 
ஆனால் டிரம்ப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் ஏமாற்றியதாக கூறப்படும் புகாரை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
'தந்தையால் அழிக்கப்பட்டவர்'
 
டிரம்பின் இந்த குணங்களுக்கு அவரின் தந்தை மீது குற்றம் சுமத்தும் மேரி, "டிரம்ப் தனது உணர்வை புரிந்துகொள்ள வாய்ப்பு கொடுக்காத அவரின் தந்தை, இந்த உலகத்தின் மீதான டிரம்பின் பார்வையை மோசமாக்கியது மட்டுமல்லாமல் இந்த உலகில் டிரம்ப் வாழ்வதற்கான திறனை அவர் அழித்துவிட்டார்" என்றும் தெரிவித்துள்ளார்.
 
 
டிரம்ப் தனது தந்தையுடன்
 
"மென்மையாக நடந்து கொள்வது என்பது டிரம்பின் அப்பாவிற்கு தெரியாத ஒன்று. எனது தந்தை ஏதேனும் தவறு செய்து மன்னிப்பு கோரினால் அதை அவர் ஏற்கவே மாட்டார்," என்கிறார் மேரி.
மேரியின் தந்தை டிரம்பிற்கு மூத்த சகோதரர். டிரம்பின் தந்தை மேரியின் தந்தையை அவமானப்படுத்துவதை பார்க்க டிரம்பிற்கு போதுமான காலம் இருந்ததாக அவர் கூறுகிறார். டிரம்பின் தந்தை தனது மூத்த மகனை நன்றாக நடத்தியதே கிடையாது. அதேபோலதான் டிரம்பும் 
என்கிறார் மேரி.
 
'பெண்களுடன் பிரச்சனை'
 
தன்னைப் பற்றிய புத்தகம் ஒன்றை எழுத டிரம்ப் தன்னிடம் கோரியதாக கூறும் மேரி, அதில் தன்னுடன் பழக மறுத்த பெண்கள் குறித்து மோசமாகவும், அசிங்கமானவர்கள் என்றும் டிரம்ப் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
 
ஆனால் சிறிது காலத்திற்கு பிறகு டிரம்ப் அந்த வேலையிலிருந்து தன்னை நீக்கியதாகவும் அதற்கு தனக்கு பணம் ஏதும் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
 
தனக்கு 29 வயதிருக்கும்போது, சகோதரரின் மகள் என்றாலும்கூட தனது உருவம் குறித்து டிரம்ப் கேலி செய்ததாகவும் கூறும் மேரி, டிரம்ப் தனது தற்போதைய மனைவி மேலானியாவிடம், "புத்தக பணியில் ஈடுபடும் சமயத்தில் எனது சகோதரர் மகள் மேரி போதைப் பொருள் பயன்படுத்தியதால் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தார்" என தெரிவித்ததாக மேரி கூறுகிறார்.
 
யார் இந்த மேரி டிரம்ப்?
 
மேரி டிரம்பிற்கு 55 வயதாகிறது. இவர் டிரம்பின் மூத்த சகோதரரான ஃப்ரெட் டிரம்ப் ஜூனியரின் மகள்..
 
ஃப்ரெட் டிரம்ப் 1981ஆம் ஆண்டு தனது 42ஆவது வயதில் காலமானார்.
அவருக்கு வாழ்நாள் முழுவதும் குடிப்பழக்கம் இருந்தது. மேலும் அதனால் ஏற்பட்ட விளைவால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
 
ஓபியாட் என்னும் போதைப் பொருளுக்கு அடிமையாவதற்கு எதிரான தனது நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு தனது சகோதரரின் பிரச்சனைகளே காரணம் என தெரிவித்திருந்தார் டிரம்ப்.
 
மேலும் வாஷிங்க்டன் போஸ்டிற்கு கடந்த வருடம் கொடுத்த நேர்காணல் ஒன்றில் தனது குடும்பத்தின் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் தனது சகோதரரை இணைய சொன்னதற்கு தான் வருந்துவதாக தெரிவித்தார்.
 
டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து மேரி பொது வெளியில் பேசுவதை தவிர்த்து வந்தார். டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட 2016ஆம் ஆண்டு இரவுதான் தனது வாழ்க்கையின் மோசமான இரவு என்று குறிப்பிடுகிறார்.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூரில் தேங்காய் சுட்ட பொதுமக்கள் – காலம், காலமாக நடந்து வரும் சம்பர்தாய நிகழ்ச்சி