Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 26 April 2025
webdunia

தடைகளைத் தாண்டிய டிக்டாக் .... 10 கோடி பயனாளர்கள்...பூரிப்பில் நிறுவனம்

Advertiesment
10 crore users
, செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (15:40 IST)
இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய அரசு அதிரடியாக 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்தியாவில் மிக அதிகமானோர் உபயோகப்படுத்தி வந்த டிக்டாக், ஹலோ ஆகிய செயலிகளும் இதில் அடங்கும்.

ஏற்கெனவே கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 59 செயலிகளும் நீக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே உபயோகத்தில் இருந்த செயலிகளையும் நெட்வொர்க் நிறுவனக்கள் மூலமாக மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் டிக்டாக் செயலியை அமெரிக்காவும் தடை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகின.

தற்போதைய தகவலின் படி, அமெரிக்காவின் ஃபெடரல் ஊழியர்கள் சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை அரசு வழங்கிய சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவு அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.

 
பயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

 
இந்நிலையில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்துவது பெரும் சிக்கல் உள்ளது என மைக்ரோசாஃப்ட் துணைநிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் டிக்டாக்கை தினமும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 5 கோடி ஆகும்.

மேலும் ஐரோப்பிய கண்டம் மற்றும்  லண்டன் மாநகரங்களில் டிக் டாக் பயன்படுத்தும்  வாடிக்கையாளர்களின் எண்னிக்கை 10 கோடியாக அதிகரித்துள்ளது.இதனால் தடைகளைத் தாண்டி வாடிக்கையாளர்கள் பெருகியுள்ளதாக  டிக்டாக் நிறுவன ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

இதில், 1600 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்று டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று ஆரக்கில் நிறுவனம் டிக்டாக் செயலியை வாங்குவதாக உறுதியில்லாத செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா அவர்களே சினிமா இல்லை இது.. வானதி சீனிவாசன்!!