மியான்மர் நாட்டில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து மூன்று முறை நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. மியான்மர் நாட்டில் உள்ள யாங்கு நகரில் நேற்று நள்ளிரவு 11:56 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 என இருந்தது
இதனை அடுத்து அதிகாலை 2:53 மணிக்கு 4.2 ரிக்டர் அளவிலும் அதிகாலை ஐந்து நாற்பத்தி மூன்று மணிக்கு நான்கு புள்ளி ஐந்து ரிக்டர் அளவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை 6:00 மணிக்குள் மூன்று முறை அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
இருப்பினும் நில அதிர்வு காரணமாக சேத விவரங்கள் குறித்த எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.