உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதேபோல் தினம் தினம் ஆயிரக்கணக்க்கான அப்ளிகேசன்கள் புதிது புதிதாக உருவாகி நமது வேலையை சுலபமாக்கிவிடுகின்றன.
அந்த வகையில் சமீபத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஸ்மார்ட் போன் அப்ளிகேசன் மூலம் அறிந்து கொள்ளும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஒரு கருவி மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கையை கணக்கிடவும் ஒரு ஆப்ஸ் வெளிவந்துள்ளது.
இதன்படி விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ள சிறிய சிப்பில் ஒரே ஒரு விந்தணுவை வைத்து, அதனை ஆண்ட்ராய்டு போனோடு பொருத்தி விட வேண்டும். பின்னர் இதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் மொபைல் அப்ளிகேசனை திறந்தால் உடனே ஸ்மார்ட் போனில் உள்ள கேமிரா செயல்பட்டு, விந்தணு துகளை ஒரே நொடியில் வீடியோ படமெடுத்து, அந்த அப்ளிகேசனுக்கு அனுப்பும். அந்த அப்ளிகேசன், அந்த வீடியோவில் விந்தணுக்களின் நகர்வை ஆய்வு செய்து அதன் எண்ணிக்கையை கணக்கிட்டு உடனே தெரிவிக்கும்
இந்த புதிய தொழில்நுட்பத்தின் தற்போது சோதனை வடிவில் வெற்றி பெற்றுள்ளதாகவும், மிக விரைவில் சந்தைக்கு வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விந்தணுவின் சோதனை செய்யும் கருவி வெறும் ரூ.350 மட்டுமே. இனி விந்தணு எண்ணிக்கையை கணக்கிட லேப் போக வேண்டிய அவசியம் இல்லை வீட்டிலேயே கணக்கிட்டு கொள்ளலாம்.