Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானே துப்பாக்கி எடுத்திருப்பேன்... இந்தியாவை காட்டமாக விமர்சித்த இம்ரான் கான்!

Webdunia
சனி, 28 செப்டம்பர் 2019 (15:54 IST)
காஷ்மீரில் இருந்திருந்தால் நானே ஒரு துப்பாக்கியை எடுத்திருப்பேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆவேசமாக பேசியுள்ளார். 
 
ஐக்கிய நாடுகள் சபையின் 74 ஆவது கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் பிரச்சனையை குறித்தும் அணு ஆயுதங்கள் குறித்தும் அதிக நிமிடங்கள் பேசினார். அவர் இந்தியா குறித்து பேசியது பின்வருமாறு, 
 
இந்தியாவில் தேர்தல் நடந்த காலகட்டத்தில், தேர்தலுக்காக மோடி அரசு சில நடவடிக்கைள் எடுத்ததை நாங்கள் புரிந்துகொண்டோம். ஆனால் தேர்தல் முடிந்து மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற பிறகும், இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி நிலவ நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் மோடி நிராகரித்து விட்டார். 
காஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று இந்த உலகம் கவனிக்க வேண்டும். அங்கு 80 லட்சம் காஷ்மீரிகளை இந்திய அரசு சிறை வைத்துள்ளது. நான் இந்த நிலையில் இருப்பதாக கற்பனை செய்து பார்க்கிறேன். 
 
55 நாட்களாக வீட்டுக்குள் அடைக்கப்பட்டு, தினமும் பாலியல் வல்லுறவு மற்றும் கொடுமைகளை பற்றி மட்டுமே கேட்டு கொண்டிருந்தால், நான் எப்படி வாழ நினைப்பேன்? காஷ்மீரில் இருந்திருந்தால் நானே ஒரு துப்பாக்கியை எடுத்திருப்பேன், என அவர் ஆவேசமாகக் குறிப்பிட்டார்.
 
65 நாட்களாக காஷ்மீரில் அமலில் இருந்துவரும் மனிதநேயமற்ற ஊரடங்கு சட்டத்தை நீக்க வேண்டும். காஷ்மீரில் தற்போது பாதுகாப்பு பணியில் இருக்கும் படையினர் அங்கிருந்து வெளியே வந்தால் என்ன நடக்கும்? ரத்த ஆறுதான் ஓடும் என்று இம்ரான் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்