டிக் டாக் வீடியோவால் பலியான வாலிபர்கள்..

Arun Prasath
சனி, 28 செப்டம்பர் 2019 (15:35 IST)
டிக் டாக் வீடியோவால் ரயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் ஹெட்ஜ்நகரை சேர்ந்த அப்தாப்ஷெரீப் மற்றும் முகமது மாடின் என்ற வாலிபர்கள், நேற்று மாலை இவர்கள் அதே பகுதியை சேர்ந்த அவ்ர்களது நண்பரான ஜபியுல்லாகானுடன் ரயில்வே தண்டவாள பகுதியில் டிக் டாக் வீடியோ எடுத்துள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த பயணிகள் ரயில் இவர்கள் மீது மோதியது. இதில் அப்தாப்ஷெரீப், முகமது மாடின் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜபியுல்லாகான் படு காயம் அடைந்தார். உடனே இத்தகவலை அறிந்து விரைந்து வந்த போலீஸார், ஜபியுல்லாகானை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடகிழக்குப் பருவமழை தொடக்கம்! நாளை முதல் தீபாவளி வரை மழை பெய்யும்: வியாபாரிகள் சோகம்..!

சென்னை மெட்ரோ பணிகளுக்கு நாளை முதல் தடை.. மேயர் பிரியா அறிவிப்பு..!

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்: மீண்டும் போர்க்கொடி தூக்கும் வேல்முருகன்..!

காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.. கேரள தேர்தலில் போட்டியா?

அமைதிக்கான நோபல் பரிசுக்கு எதிர்ப்பு: நார்வே தூதரகத்தை மூடியது வெனிசுலா அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments