Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

என்னைக் கொல்ல சதி நடக்கிறது - முன்னாள் அதிபர் இம்ரான் கான்

Advertiesment
கால்களில் குண்டுகள்
, செவ்வாய், 8 நவம்பர் 2022 (21:10 IST)
தன்னைக் கொல்ல சதி நடப்பதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அன்று, பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வசிராபாத்தில்,  இம்ரானின் கட்சி சார்பில்,ஆளும் அரசை எதிர்த்து நீண்ட பேரணி நடந்தது. இந்த பேரணியில் இம்ரான்கான் கலந்து கொண்ட நிலையில் திடீரென மர்ம நபர்  துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதில், இம்ரான்கான் வலது காலில் குண்டு  பாய்ந்தது, இதைஅடுத்து  உடனடியாக இம்ரான்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இம்ரான்கானுடன் கட்சி நிர்வாகிகள் 10 பேர் காயமடைந்ததாகவும் இதில், ஒருவர் பலியானதாகவும், 9 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும்  தகவல்கள் வெளியானது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமர் ஷெரீப், உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். .

இதுகுறித்து போலீஸார் விசாரித்ததில், இம்ரானை துப்பாக்கியால் சுட்ட  நவீத்திடம் இருந்து 9. எம்.எம் ரக துப்பாக்கியைக் கைப்பற்றினர். இந்த நிலையில்

துப்பாக்கிச்சூட்டில்  காயமடைந்தாலும் அரசுக்கு எதிராக தொடர்ந்து வலிமையுடன் போராடுவேன் என்று உறுதிபட தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் லாசூரில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு அறுவைச்சிகிச்சை  முடிந்து இன்று இம்ரான் கான் வீடு திரும்பினார்.

அப்போது, அவர் கூறியதாவது: என் காலில் இருந்து 3 குண்டுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இடது காலில் சில குண்டுகள் இருந்ததாகவும் அதை  மருத்துவர்கள் விட்டுவிட்டதாகவும் கூறியவர்,   நான் ஆட்சியில் இருந்த மூன்றரை ஆண்டுகளை நினைத்துக் கொள்ளுங்கள், எனக்கு உளவுத்துறை, உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்புள்ளதால், எனக்கு எதிராகவும் என்னைக் கொல்லவும் சதி நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடவுள்ள டொனால்ட் டிரம்ப் ! அமெரிக்காவில் பரபரப்பு