Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகின் டாப் பணக்காரர் எலான் மஸ்கை முந்தி அர்னால்ட் முதலிடம்!

bernard Arnold
, வியாழன், 8 டிசம்பர் 2022 (22:12 IST)
உலக முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த  எலான் மஸ்ககை முந்தி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் அந்த இடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் ஆகிய  நிறுவனங்களின்  தலைவராக இருப்பவர் எலான் மஸ்க்.

இவர், கார் தொழில்நுட்பத்துறையில் சாதனை படைத்துள்ளதைப் போன்று மனித மூளையை சிப்பால் இயங்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

சமீபத்தில், டுவிட்டர் நிறுவனத்தை  ரூ.3 ½ லட்சம் கோடிக்கு விலைக்கு வாங்கியதுடன், பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். இது உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன்பின்னர், டெஸ்லா நிறுவனத்தின் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை அவர் விற்றுத்தான் டுவிட்டர் நிறுவனத்தின் மீது ரூ.3 ½ லட்சம் கோடி முதலீடு செய்தார் எனக் கூறப்பட்ட நிலையில், அவரது சொத்து மதிப்பு  ரூ.15.28 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.

எனவே, உலகின் முன்னணி ஆடை விற்பனையகம் ‎LVMH -  Louis vuittonநடத்தி வரும் பிரான்ஸ் நாட்டு தொழில் அதிபர்  பர்னார்ட் அர்னால்ட் உலகின் டாப் பணக்கார்களில்  முதலிடம் பிடித்துள்ளார். இவர் சொத்து மதிப்பு ரூ.15.29 லட்சம் கோடியாகும்.

Edited By Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தோனேஷியாவில் மீண்டும் நில நடுக்கம்