புத்தாண்டு தினத்தில் ஜப்பானில் நிகழ்ந்த சோகம் : பகீர் சம்பவம்

Webdunia
செவ்வாய், 1 ஜனவரி 2019 (12:41 IST)
ஜப்பானில் புத்தாண்டு தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.  நேற்று டோக்கியோ நகரில் ஹராஜுக்கு பகுதியில் டகேஷிட்டா  என்ற சாலையில் தெருவில் புதுவருட கொண்டாட்டத்திற்காக ஆயிரக்கணக்கான  மக்கள் குழுமி இருந்தனர்.
இந்நிலையில் புத்தாண்டு தொடங்குவதற்கு பத்து  நிமிடங்கள் இருந்த போது, ஒரு இளைஞன் கொலை வெறியுடன் காரை ஓட்டி வந்து மக்கள் கூட்டத்தின் மீது மோதினான்.
 
இந்த தாக்குதலில் 9 பேர் காயம் அடைந்ததாகவும். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகின்றன. 
 
இவ்விபத்தை ஏற்படுத்திய  கஜூஹிரோ குசாகாபே என்ற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக  ஜப்பான் போலீஸார் தெரிவித்துள்ளனர். 
 
புத்தாண்டு தினத்தன்று நடந்த இச்சம்பவம் டோக்கியோ பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments