Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

Flight

Senthil Velan

, செவ்வாய், 21 மே 2024 (18:31 IST)
சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர். 
 
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. விமானத்தில் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். 

ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி பறந்த விமானம், எதிர்பாராத விதமாக நடுவானில் குலுங்கியது. இதனால் விமானம் பாங்காக் நகருக்கு திருப்பிவிடப்பட்டு அங்கே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
 
அரிதான இந்த விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் 30 பயணிகள் காயமடைந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட விமானத்தின் பயணிகளுக்கு உதவ தனிக்குழுவை பாங்காக்கிற்கு அனுப்பியுள்ளதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்ச்சை வீடியோவை நீக்கிய இர்பான்.. கைது செய்யப்பட வாய்ப்பா?