Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அல்கொய்தா தலைவரை காட்டிக் கொடுத்த பாகிஸ்தான் அரசு ! ஏன் தெரியுமா?

Minister of Pakistan
, புதன், 3 ஆகஸ்ட் 2022 (21:21 IST)
அல்கொய்தா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், பாகிஸ்தான் அவரது நடமாட்டத்தைக் காட்டிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அல்கொய்தா தலைவராக பின்லேடன் இருந்தபோதுதான் அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட என்பதும் அதன் பின்னர் குறிவைத்து அமெரிக்க ராணுவம் பின்லேடனை கொன்று பழிவாங்கியது.

இந்த நிலையில் அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி என்பவர் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் அறிவித்தார்.

அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கு முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள் பைடனை பாராட்டினர்.

இந்த நிலையில், சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதல் கொல்லப்பட்ட அல் ஜவாஹிரி, ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் புற நகர் பகுதியில் உள்ள புதிய வீட்டில் பதுங்கி இருந்துள்ளார்.

எனவே, பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்திக் கொண்டு, அதன் மூலம் ஆளில்லா விமானம் இயக்கி,அல் கொய்தா தலைவர்  அல் ஜவாஹிரியை பாகிஸ்தான் அரசு காட்டிக்கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், அதில் இருந்து மீள வேண்டி, சர்வதேச நிதி அமைப்பிடம் இருந்து நிதி பெற, அமெரிக்காவுக்கு உதவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேசிய கொடியை புரொபைல் பிக்சராக வைத்த ராகுல், பிரியங்கா காந்தி