Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகம் தோன்ற காரணமாக இருந்த ஆற்றல் அலைகள் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் அறிவிப்பு

உலகம் தோன்ற காரணமாக இருந்த ஆற்றல் அலைகள் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் அறிவிப்பு
, வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (14:53 IST)
உலகம் தோன்ற காரணமான ஈர்ப்பு ஆற்றல் அலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.


 

 
நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதும்போது அவை இணைந்து ஈர்ப்பாற்றல் அலைகள் உருவாகுகின்றன.
 
அவை சுருங்கி விரிவடைவதால் ஆற்றல் உந்தப்பட்டு உலகம் உருவானதாக கருதப்படுகிறது.
 
இந்த ஈர்ப்பு ஆற்றல் அலைகள் பிரபஞ்சத்தின் ஒலி வழித்தடங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஈர்ப்பு ஆற்றல் அலைகளின் விரிவாக்கம் தான் அண்ட வெளியை உருவாக்குவதாக கூறப்படுகின்றனது.
 
அது தொடர்பான ரிலேடி விட்டி தியரியை பிரபல விஞ்ஞானி ஆர்பல்ட் ஐன்ஸ்டீன் கூறினார்.
 
இது குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அமெரிக்காவில் சர்வதேச விண்வெளி இயற்பியல் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் லிசோ எனப்படும் அதிநவீன டெலஸ் கோப் கருவி மூலம் பல ஆண்டுகளாக ஆய்வு மேற் கொண்டனர்.
 
இந்த ஆய்வில் கருத்துளைகள் (நியூட்ரான் நட்சத்திரங்கள்) களின் மோதலில் எழுந்த ஓசையின் நுண்ணிய ஈர்ப்பாற்றல் அலைகளை கண்டறிந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil