Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறுவை சிகிச்சையால் பெண்ணாக மாறிய ஆண் ராணுவ அதிகாரி

அறுவை சிகிச்சையால் பெண்ணாக மாறிய ஆண் ராணுவ அதிகாரி
, திங்கள், 19 ஜனவரி 2015 (17:36 IST)
ஆணாகப் பிறந்த ராணுவ அதிகாரி ஒருவர் பாலியல் அறுவை சிகிச்சை மூலம் தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டார்.
 

 
இங்கிலாந்தை சேர்ந்த ஹான்னா விண்டர் போர்னே (27) என்பவர் நியூ கேஸ்டில் பல்கலைக்கழகத்தில் மின் பொறியாளர் படிப்பு படித்து வந்துள்ளார். பின்னர் தனது 15ஆவது வயதில் கல்லூரியின் ஆயுதப்படை பிரிவில் சேர்ந்துள்ளார்.
 
பின்னர் ராணுவத்தில் உயர் பதவிகளை அடைந்தார்.பருவம் எய்தும் காலகட்டத்தில் ஆணாகப் பிறந்த ஹான்னா தன்னை பெண்ணாக உணரத் தொடங்கிவிட்டார். ஆனால் ராணுவத்தில் இருந்ததால் தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரிடமும் ஆணாக நடித்து கொண்டு இருந்தார்.
 
webdunia

ஆண் ஹான்னா..
அவர் ஆப்கானிஸ்தான் பாஸ்டியன் ராணுவ முகாமில் பணிபுரிந்தபோது தன்னை முழுமையான பெண்ணாக காட்டி கொள்ள விரும்பினார். அதற்காக அவர் பாலியல் மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
 
ஹான்னா சிகிச்சை முடிந்து முழுமையான பெண்ணாக உருமாறியுள்ளார். தற்போது அவர் ராயல் எலக்ட்ரிக்கல் மற்றும் இயந்திரப் பொறியாளர்களாக பணிபுரியும் 100 ராணுவத்தினரின் மாற்றுப் பாலின தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
 
webdunia

பெண் ஹான்னா..
இது குறித்து ஹான்னா விண்டர்போர்னே கூறுகையில், ”நான் ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்தபோது நான் நடித்துக் கொண்டிருந்தேன். என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரிடமும் நான் நடிக்க வேண்டியாதாக இருந்தது.
 
நடித்துக் கொண்டிருப்பதை விட்டு வெளியே என்னால் வரமுடியவில்லை. உலகம் எப்படி எடுத்துகொள்ளும் என எனக்கு தெரியாதிருந்தது. ஆனால் தற்போது எந்த பயமும் என்னிடம் இல்லை” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil