Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனித மருந்தென்று 50000 பேருக்கு பினாயிலை ஊற்றிய பாதிரியார்

Webdunia
புதன், 22 மே 2019 (10:56 IST)
உகாண்டாவில் புனித மருந்து என்ற பெயரில் பினாயிலை மக்களுக்கு குடிக்க கொடுத்த அமெரிக்க பாதிரியாரை போலீஸ் கைது செய்தனர்.
 
அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த பெந்தகோஸ்தே பாதிரியார் ராபர்ட் பால்ட்வின். உகாண்டாவில் மத பரப்புரையாளராகவும், பாதிரியாராகவும் பல வருடங்களாக பணிபுரிகிறார். இவர் புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற கொடிய வியாதிகளை குணப்படுத்தும் அற்புத மருந்து என சொல்லி அவரவர் வயதுகேற்ப வகைவகையான கெமிக்கல்களை வாங்கி அவர்கள் வாயில் ஊற்றியுள்ளார். இதனால் சுமார் 50000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் உபயோகித்த கெமிக்கல்கள் துணியில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் மற்றும் அழுக்குகளை அகற்ற பயன்படும் பினாயில் வகை கெமிக்கல்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த வகையான கெமிக்கல்களை வைத்து நோயை சரிசெய்ய முடியும் என்று உலகமெங்கும் சொல்லி திரியும் எம் எம் எஸ் (MMS - Miracle Mineral Solution) என்ற அமைப்பை சேர்ந்தவர்தான் இந்த பால்ட்வின் என கண்டுபிடித்துள்ளனர். இந்த அமைப்பு கனடா, அயர்லாந்து போன்ற நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5வது நாளாக தங்கம் விலை உயர்வு.. ஒரு சவரன் ரூ.58,000ஐ நெருங்குகிறது..!

ஜெயிலுக்கு போயிட்டு வந்தாலே போராளிதான்.. கஸ்தூரியின் ஆதரவாளர் பேட்டி

ரஷ்யாவை தாக்க ஏவுகணை குடுத்தா உங்களையும் தாக்குவோம்! - அமெரிக்காவை எச்சரித்த புதின்!

நேற்று அதானியால் சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தென் தமிழகத்தில் 25, 27 தேதிகளில் கனமழை.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments