முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - ஈரான் போர்! டிவியில் ஒளிபரப்பிய ஈரான்!

Prasanth K
செவ்வாய், 24 ஜூன் 2025 (10:53 IST)

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது போரை நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

ஈரான் - இஸ்ரேல் இடையே ஏற்பட்ட போர் மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு நாடுகளும் ஏவுகணைகளால் தாக்கிக் கொண்ட நிலையில், அமெரிக்க விமானங்கள் ஈரானின் அணு சக்தி பகுதிகளை தாக்கியதும், அதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தை ஈரான் தாக்கியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதனால் போர் பெரிய அளவில் மாறப்போகிறது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தத்திற்கு தான் பேசியுள்ளதாக ட்ரம்ப் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இந்த செய்தியை ஈரான் மறுத்த நிலையில், தற்போது ஈரான் தனது போர் நிறுத்த அறிவிப்பை அந்நாட்டு டிவி சேனல்களில் ஒளிபரப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் தொடங்கி இரண்டு வாரத்திற்குள்ளேயே முடிவுக்கு வந்துள்ள நிலையில், இனி படிப்படியாக விமான சேவைகள், கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் இருந்தால்தான் முஸ்லிம்கள் இருக்க முடியும்: முதல்வர் பேச்சுக்கு விஹெச்பி. கடும் எதிர்ப்பு

இன்று இரவு வரை 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?

முஸ்லிம் 2ஆம் திருமண பதிவுக்கு முதல் மனைவி சம்மதம் அவசியம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

9 மணி நேரம் விஜய் அழுதார்! தைரியம் இருந்தா என் தலைவன் மேல கை வைங்க! - ஆதவ் அர்ஜூனா சவால்!

போலி பிரச்சினைகளை உருவாக்குவது ராகுல் காந்தியின் வழக்கம்: பாஜக பதிலடி

அடுத்த கட்டுரையில்
Show comments