Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

Prasanth K
வியாழன், 10 ஜூலை 2025 (12:50 IST)

தொழில்நுட்ப வளர்ச்சியில் தற்போது இணைய தேடுபொறி நிறுவனங்களிடையே ஏஐ தொழில்நுட்ப யுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் அடுத்த அடியை எடுத்து வைக்க தயாராகியுள்ளது ஓபன் ஏஐ நிறுவனம்.

 

சாட் ஜிபிடி (Chat GPT) மூலம் உலகில் AI தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது Open AI. சாட் ஜிபிடி வருகையை தொடர்ந்து கூகிளும் GEMINI AI உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்திய நிலையில் சீனாவின் DeepSeek, GWEN AI என பல ஏஐகள் அறிமுகமாகியுள்ளன. இதனால் ஆட்டோமேஷன் நடவடிக்கைகளும் பல துறைகளில் வேகமாக அதிகரித்து வருகிறது.

சாட்ஜிபிடியால் ஏற்கனவே கூகிள் ப்ரவுசர் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கூகிள் தேடுபொறியை விட பலரும் சாட் ஜிபிடியில் வெறும் வாய்ஸ் கமெண்டில் கேட்டாலே அது தகவல்களை அள்ளி வழங்குவதால் அதற்கு மவுசு கூடியுள்ளது. மேலும் ஏஐ திரட்டி தரும் தகவல்களில் ஏற்படும் தகவல் பிழையை ப்ரவுசர்கள் சுட்டிக்காட்டும் நிலையில் Deep Search மூலமாக தளங்களின் தரவுகளையும் ஏஐக்கள் வழங்கத் தொடங்கிவிட்டன.

 

இந்நிலையில்தான் அடுத்த கட்டமாக AI தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய வெப் ப்ரவுசரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது ஓபன் ஏஐ நிறுவனம். அதற்கான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் சில வாரங்களில் இந்த புதிய ஏஐ ப்ரவுசர் பயன்பாட்டிற்கு வரும் என பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கூகிள் ப்ரவுசர் பெரும் பின்னடைவை சந்திக்கக் கூடும் என கூறப்படுகிறது.

 

இதனால் கூகிள் சூதானமாக செயல்பட்டு தனது ப்ரவுசருடனே ஜெமினியை Integrate செய்துள்ளது. ப்ரவுசரிலேயே Dive Deeper in AI Mode மூலமாக ஜெமினிக்கு மாறி ப்ரவுசர் போல அல்லாமல் ஏஐ எக்ஸ்பீரியன்ஸில் தகவல்களை பெற முடியும். ஆனால் அதையும் ஓபன் ஏஐ சிந்தித்தே பல புதிய அம்சங்களை தனது ப்ரவுசரில் அமைத்திருக்கும் என்கிறார்கள் ஏஐ தொழில்நுட்ப ஆர்வலர்கள்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை! மத்திய அரசு அனுமதி! - கட்டணம் எவ்வளவு?

மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை.. வைகோ குற்றச்சாட்டால் மதிமுகவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments