Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்னாள் பிரதமர் இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையம்

முன்னாள் பிரதமர் இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்த  தேர்தல் ஆணையம்
, வெள்ளி, 21 அக்டோபர் 2022 (15:53 IST)
பாகிஸ்தான்  பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது பெற்ற பரிசுப் பொருட்களை விதிகளை மீறி விற்றதாக புகார் எழுந்த நிலையில், அவரை தகுதி  நீக்கம் செய்து பொதுத்தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றார் இம்ரான் கான். 

அந்த  நாட்டில் அரசியல் நெருக்கடி இருந்த நிலையில்,  கடந்த ஏப்ரலில் 10 ஆம் தேதி  பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு தோல்வியுற்றது.  எனவே புதிய  பிரதமராக முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில்,   இம்ரான் கான் ஆட்சிக் காலத்தில்,    வெளிநாட்டில் அவருக்கு  ரூ.18 கோடி மதிப்புள்ள  நெக்லஸ் அளிக்கப்பட்டதாகவும், அதைத் தன் உத வியாளர் மூலம் ரூ.18 கோடிக்கு  நகைக் கடையில் விற்கப்பட்டதாகவும் புகார்  எழுந்தது. இதுகுறித்து தேசிய  புலனாய்வு விசாரணை குழு  விசாரணை செய்தது.

பிரதமர்  வெளி நாட்டில்  பரிசுப் பொருட்கள் பெற்றால் அதை      அரசுக் கருவூலகத்தில் சேர்க்க வேண்டும். ஆனால், இம்ரான் கான் அதை கருவூலத்திற்கு அனுப்பவில்லை என புகார் எழுந்தது.

அத்துடன் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை இம்ரான் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அப்படி அவருக்குப் பிடித்திருந்தால் அந்தப் பரிசுப் பொருட்களுக்கான பணத்தைச் செலுத்தி கருவூலத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.  இதற்கான விலை என்பது ஏல முறை நிர்ணயிக்கப்படும்.  ஆனால், இங்குள்ள விலை உயரிய பொருட்களை அவர் பணம் கொடுக்காமல் எடுத்துச் சென்றதாகவும் அதன் மதிப்பு ரூ.286 கோடி ரூபாய் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், பிரதமராக இருந்த காலத்தில் பெற்றப்பட்ட பரிசுப் பொருட்களை விதிகளை மீறி விற்றதற்காக  இம்ரானை 5 ஆண்டுகள்  தேர்தலில் நிற்க தடை விதித்து, தகுதி நீக்கமும் செய்து உத்தவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

அடுத்தாண்டு பொதுத்ததேர்தல் வரவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு இம்ரான் மற்றும் அவரது கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துப்பாக்கிச்சூடில் காயமடைந்த மீனவருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவிப்பு