Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மஜாஜ் படுக்கை துளைக்குள் தலை சிக்கிய சிறுவன் ! பரபரப்பு சம்பவம்

Advertiesment
மஜாஜ் படுக்கை துளைக்குள் தலை சிக்கிய  சிறுவன் ! பரபரப்பு சம்பவம்
, சனி, 3 ஆகஸ்ட் 2019 (19:56 IST)
சீனாவில் உள்ள ஒரு பிரபல மசாஜ் சென்டரில், மஜாஜ் படுக்கைக்குள் ஒரு சிறுவன் தலை சிக்கிக்கொண்டான். பின்னர்  தீயணைப்புத்துறையினர் வந்து சிறுவனை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் பூஜியான் மாகாணத்தில் உள்ள ஷிஷி என்ற ஒரு மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர் உள்ளது. இங்கு தாயுடன் சென்ற 4 வயது சிறுவனை, மசாஜ் அறைக்குள் அமர வைத்தனர்.
 
இந்நிலையில் தாய் அங்கு வருவதற்கு வெகுநேரம் ஆனதாகத் தெரிகிறது.அதனால் சிறுவன் அங்கு உலவத் தொடங்கினான். பின்னர் அங்குள்ள மசாஜ் படுக்கையின்  மீது ஏறிய சிறுவன், தலை வைக்கும் பகுதியில் துளை இருப்பதைப் பார்த்துள்ளான். அதிலிருந்த  பஞ்சுக்கவரை எடுத்துவிட்டு அதற்குள் தலையை விட்டான். ஆனால் அவனால் தலையை வெளியெ எடுக்கமுடியவில்லை. 
 
இதையடுத்து அவன் சத்தமிட்டு கத்தியுள்ளான். அங்கு விரைந்து வந்த ஊழியர்கள் உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
 
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், சிறுவனின் தலைப் பகுதி மாட்டப்பட்ட மரப்பலகையை வெட்டி சிறுவனை மீட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டாலினை களத்தை விட்டு வெளியேற்றுவோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி