Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி – ராணுவத் தளபதி அதிர்ச்சித் தகவல் !

Advertiesment
இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி – ராணுவத் தளபதி அதிர்ச்சித் தகவல் !
, சனி, 4 மே 2019 (09:00 IST)
இலங்கைக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு இந்தியாவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு இருக்கலாம் என இலங்கை ராணுவத் தளபதி மகேஷ் சேனநாயகா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி  அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்தவெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை 253 பேர் வரை உயிர் இழந்துள்ளனர் என்றும் மேலும் 500 பேருக்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனர்.

உலகை உலுக்கிய இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து இப்போது இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிபிசி செய்தியாளருக்கு இலங்கை ராணுவத் தளபதி  மகேஷ் சேனநாயகா அளித்துள்ள நேர்காணலில் ‘ இலங்கை குண்டுவெடிப்புகளில் சம்மந்தபட்டவர்கள் என சந்தேகப்பட படுவ்பவர்கள் இந்தியாவிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர். பயங்கரவாத பயிற்சிக்காகவே அவர்கள் கேரளா, பெங்களூர் மற்றும் காஷ்மீர் பகுதிகளுக்கு சென்றிருப்பார்கள் என சந்தேகிக்கப்படுகிறது. ’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘குண்டுவெடிப்பு நிகழ்த்தியவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டார்கள் அல்லது கொல்லப்பட்டு விட்டார்கள். கடந்த 10 ஆண்டுகளாகத்தான் மக்கள் அமைதியையும் சுதந்திரத்தையும் அனுபவித்து வருகிறார்கள். அந்த உணர்வில் நாட்டின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்பட மறந்துவிட்டார்கள்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உச்சநீதிமன்றத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் – திமுக செய்த மறைமுக உதவி !