காங்கோவில் 20 பேரை தூக்கிலிட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (20:29 IST)
ஆப்பிரிக்க கண்டத்தின் மத்திய மேற்குப் பகுதியிலுள்ல ஒரு நாடு காங்கோ. இங்கு, அதிபர் பெலிக்ஸ் தெஷிக்சேடி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, பல வருடங்களாக உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், குழந்தைகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த நாட்டில், பல பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கோவின் கிழக்கில் உள்ள இடுரி மற்றும் டிஜிகு ஆகிய மாகாணங்களில் நேற்று திடீரென்று பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில், சாலையில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மக்களை கிளச்சியார்கள் கடத்தினர். இதில்,  ஓட்டுனர் உள்ப்ட அப்பாவி மக்கள் 17 பேரை கிளர்ச்சியாளர்கள் தூக்கில் போட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து, காங்கோ நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுபோன்று    நடக்காமலிருக்கும் வகையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில், காங்கோவிலுள்ள கிழக்கு இடுரி மற்றும் வடக்கு கிவு மாகாணங்களில் பயங்கரவாதிகள் தாக்குலில் ஈடுபட்டனர். இதில், 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பீகாரில் என்.டி.ஏ ஆட்சி.. ஜீரோவாகும் பிரசாந்த் கிஷோர்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆச்சரியம்..!

இஸ்லாமாபாத் தாக்குதல்களுக்கு இந்தியா தான் காரணம்.. ஷெபாஸ் ஷெரிஃப் குற்றச்சாட்டு..!

புரியாமல் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி..!

ஞாயிறு அன்று தீபாவளி.. 2026 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை தினங்களின் பட்டியல்..!

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

அடுத்த கட்டுரையில்
Show comments