பாக்தாத்தில் விமான நிலையம் மீது தாக்குதல்! – விமானம் சேதம்!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (08:36 IST)
ஈராக்கின் பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க வான்வழி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமாணி கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் நேற்று அதிகாலை பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தை குறி வைத்து பயங்கரவாதிகள் 4 ராக்கெட் குண்டுகளை ஏவியுள்ளனர். இந்த ராக்கெட்டுகளௌ ஈரான் வான் பாதுகாப்பு படை வானிலேயே சுட்டு வீழ்த்தியது. எனினும் சுட்டு வீழ்த்தப்பட்ட குண்டுகள் விமான நிலையத்தின் ஓடுபாதையில் விழுந்தன. அதில் ஒரு குண்டு ஓடுபாதையில் நின்றிருந்த விமானத்தின் மீது விழுந்ததில் விமானம் சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments